Advertisement

நெல்லையில் சாலை விபத்தில் 5 பேர் பலி

திருநெல்வேலி: நெல்லையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.



திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த கரும்புளியூத்தில் தென்காசியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற காரும், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.



இந்த சம்பவத்தில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் தப்பியோடினார். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாரிகள் வரவில்லை



விபத்தில் 5 பேர் உயிர் இழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகரன், எஸ்பி அருண் சக்தி குமார் என எந்த உயரதிகாரிகளும் வரவில்லை.


தாசில்தார் கந்தப்பன் மட்டும் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை பார்வையிட்டார். இது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    டாஸ்மாக் சரக்கின் வேலை இதுதான் .. இதையெல்லாம் IAS.IPS. அதிகாரிகள் வேறு பார்ககாமல் இருப்பதும் சரியாக தெரியவில்லை .. ஆக கூடி காரில் பயணம் சென்றவர்கள் பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார்கள் .. முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் குடும்பத்தினர் கார்கள் இதுபோன்ற நிலையில் இருந்தால் மட்டுமே IAS. IPS.அதிகாரிகள் வருவார்கள் .. நல்ல அரசு .. நல்ல அதிகாரிகள் ..

  • C.Jeyabalan - Shoreline,யூ.எஸ்.ஏ

    படத்தை பார்க்கும்போது, லாரிடிரைவர் மீது குற்றம் இருப்பதுபோல் தோன்றவில்லை. காரணம்: லாரி இடதுபுறமாக வருகின்றது, கார் வலது புறமாக செல்கிறது நேருக்குநேர் விபத்து நிகழ்ந்துள்ளது. நிச்சயமாக, இன்னொரு வாகனம் காருக்கு முன்னாள் சென்றிருக்கும் கார் முந்தி செல்ல முயற்சிக்கும் வேளையில் விபத்து நிகழ்ந்திருக்கு. இது என் கணிப்பு விசாரணையே, உண்மையை வெளிக்கொணரும்

Advertisement