Advertisement

போலீசார் தாக்கியதில் ஓட்டல் அதிபர் மயக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி, பேட்டையை அடுத்துள்ள சுத்தமல்லியில் வேலு 36, என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று (ஏப்.,29) இரவு அங்கு ஞானராஜ் என்ற போலீஸ்காரர் சாப்பிட வந்தார். அப்போது டேபிளை சுத்தம் செய்யுமாறு போலீஸ் கூறியுள்ளார்.
இதில் ஓட்டல் உரிமையாளர் வேலுவிற்கும் போலீஸ்காரர் ஞானராஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலுவை வெளியே இழுத்து வந்து போலீசார் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமுற்றார். அவரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று வழக்கு பதிவு செய்தனர். வியாபாரி தாக்கப்பட்டதை கண்டித்து இன்று (ஏப்.30) சுத்தமல்லியில் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • ஆப்பு -

    ஓசிச்சோறு பக்கி கும்பல்.

  • Girija - Chennai,இந்தியா

    கழக கண்மணிகள் இப்பவே மெதப்பாகத்தான் இருக்கின்றனர் நிஜமாகவே வந்துருவாயலா?

  • சௌக்கிதார் வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

    டுபாகூர் போலீஸ்....

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    போனது ஓசி சாப்பாட்டுக்கு.இதில் பந்தா வேறு. ஓட்டல் ஒனரை போலீஸ் அடித்து உதைத்து விட்டு அவர் மீதே பொய் வழக்கு.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    இனிமே அந்த போலீசுக்காரன் நெல்லையில் எந்த ஹோட்டலுக்கும் போகமுடியாது. சாப்பிடப்போகும் இடத்தில் சண்டை வைக்கக்கூடாது என்பது அன்னாநந்தாவின் முதல் ரூல்.

Advertisement