Advertisement

கோழி கழிவுகளை ஏற்றி வந்த டிரைவர் கைது

நாகர்கோவில்: கேரளாவில் இருந்து கோழி கழிவுகளை, கன்னியாகுமரிக்கு டெம்போவில் ஏற்றி வந்த டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.


கேரளாவிலிருந்து கோழி, மருத்துவக் கழிவுகளை, வாகனங்களில் எடுத்து வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் மர்ம நபர்கள் கொட்டி செல்வது வழக்கம்.கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் அளித்தும், தகுந்த நடவடிக்கை இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.இந்நிலையில், நேற்று காலை இராமனாதிச்சன்புதுார் பகுதியில், சந்தேகப்படும்படியான வந்த மினி லாரியில் இருந்து, கடும் துர்நாற்றம் வீசியது. இதை கண்ட அப்பகுதி மக்கள், அந்த வாகனத்தை சிறைபிடித்து சோதனையிட்டனர்.

அப்போது கேரளத்திலிருந்து, கோழி கழிவுகளை எடுத்து வந்து, அப்பகுதியில் உள்ள தோப்பில் கொட்டி திரும்பி செல்வது தெரிய வந்தது. இதையறிந்து ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள், வாகனம் மற்றும் டிரைவரை மருங்கூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்று, செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.அஞ்சுகிராமம் போலீசார், கழிவுகளை ஏற்றி வந்த நெல்லை மாவட்டம், ராதாபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் தில்லை பாலமுருகன், 29, மீது வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement