Advertisement

ஓட்டு எண்ணும் மையத்தில் தகராறு: ஏட்டு,

நாகர்கோவில்:நாகர்கோவிலில் ஓட்டு எண்ணும் மையத்தில், காவலருடன் தகராறில் ஈடுபட்ட, போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கன்னியாகுமரி தொகுதியில், பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான நாகர்கோவில், கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராஜக்கமங்கலம் காவல் நிலைய ஏட்டு கிருஷ்ணகுமார், மற்றொரு காவலரான ஸ்ரீகுமாரிடம், கடந்த 30ம் தேதி குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்ரீகுமாரின் பைக்கையும் அவர் உடைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணகுமாரை மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாத் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். தகராறில் ஈடுபட்ட இருவர் மற்றும் அங்கு பணியில் இருந்தமற்ற காவலர்களிடம், விசாரணை நடத்தப்பட்டது. கண்காணிப்பு கேமிராவின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இது குறித்த அறிக்கையினை, ஏ.எஸ்.பி., ஜவகர் மாவட்ட எஸ்.பி.,யிடம் அளித்தார். மாவட்ட, எஸ்.பி., ஸ்ரீநாத், ஏட்டு கிருஷ்ணகுமாரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement