Advertisement

நெல்லை அருகே கார் விபத்து இணை கமிஷனரின் தந்தை பலி

திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே, சாலையின் தடுப்புச் சுவரில் கார் மோதியதில், சென்னை போலீஸ் இணை கமிஷனரின் தந்தை பலியானார்; மூவர் படுகாயம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்தவர் ரத்தினசபாபதி, 67. இவரது மகன் சுதாகர், சென்னை போலீசில், போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர். இவரது தம்பி அருண்பிரகாஷ், 40, சென்னையில் இருந்து, 'ஹோண்டா' காரில் மனைவி, மகள் மற்றும் தந்தையுடன், கன்னியாகுமரி நோக்கிச் சென்றார்.நேற்று அதிகாலை, 4:00 மணியளவில், திருநெல்வேலி--யை அடுத்துள்ள மூன்றடைப்பு அருகே, கார் திடீரென சாலையின் வலதுபுற தடுப்புச் சுவரில் மோதியது.

இதில், காரின் இடதுபுற கதவு திறந்து, முன்சீட்டில் அமர்ந்திருந்த ரத்தின சபாபதி, வெளியே துாக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயத்துடன், சம்பவ இடத்திலேயே பலியானார். அருண்பிரகாஷ், அவரது, 34 வயது மனைவி, 2 வயது மகள், காயங்களுடன் உயிர் தப்பினர். மூவரும், நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்றடைப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement