Advertisement

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

நாகர்கோவில், நாகர்கோவிலைச் சேர்ந்த சிறுமியின் திருமணத்தை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.குமரி மாவட்டம், வெள்ளமடம் அடுத்த குமரன்புதுாரைச் சேர்ந்த, பிளஸ் 2 முடித்த, 17 வயது சிறுமிக்கும், நெல்லை மாவட்டம், அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த, 28 வயது வாலிபருக்கும், நேற்று முன்தினம் திருமணம் நடக்க இருந்தது. சிறுமி மேலும் படிக்க விரும்பி, பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். 'சைல்டு லைன்' அமைப்புக்கு, அவர்கள் தகவல் அளித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் போலீசார் விசாரித்து, திருமணத்தை நிறுத்தினர்; சிறுமியை, அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.வாக்குவாதத்தில் ஈடுபட்ட, பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிகாரிகள் அமைதி படுத்தினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement