Advertisement

ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

தேனி : ரோட்டில் இடையூறாக செயல்பட்ட கடைகள் அகற்றப்பட்டு தேனி உழவர்சந்தை புதிய பொலிவுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.தேனி உழவர் சந்தை நகரில் மையத்தில் அமைந்ததால் பலரும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வந்தது. தினமும் புத்தம் புதிய காய்கறி, கீரைகள் 'ப்ரெஸ் ' ஆக வருவதாலும், விலை குறைவாக இருப்பதாலும் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். உழவர் சந்தையில் கடை கிடைக்காதவர்கள் கான்வென்ட் மருத்துவமனை முதல் தாலுகா அலுவலகம் வரை ரோட்டின் இருபுறமும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.

இதனால் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக முகூர்த்த நாட்களில் வாகனங்களில் வரும் பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டு வந்தது. தாசில்தார், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் என பலரும் இதனை கண்டுகொள்ளவில்லை.போடி உழவர் சந்தையில் இருந்து வந்து ஒரு மாதத்திற்கு முன் தேனியில் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற பன்னீர் செல்வம், உழவர் சந்தை மேம்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்துள்ளார். ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகறறி உழவர்சந்தை பின் பகுதியில் மீறு சமுத்திரம் கண்மாய் பகுதியில் அவற்றை அமைக்க இடம் ஒதுக்கியுள்ளார்.

தினமும் கண்காணிப்பு செய்ய பிற உழவர் சந்தையில் உள்ள பணியாளர்களையும் தேனிக்கு தற்காலிகமாக பணியில் அமர்த்தியுள்ளார். இவர்கள் உழவர் சந்தை அருகே வாகனங்களை ஒழுங்குபடுத்துதல், குறிப்பிட்ட நேரத்தில் காய்கறி இறக்க அனுமதி, அடையாள அட்டை அணிதல், குப்பை உடனுக்குடன் அகற்றுதல் போன்ற பணிகளை செய்கின்றனர். . சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துள்ளனர். முறையான புதுப்பித்தல் இன்றி செயல்பட்ட ஆவின் கடை மூடப்பட்டது. கேன்டீன் தரமாக செயல்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் பொதுமக்கள் வருகை அதிகரித்து, காய்கறிகளின் வரத்து 45 ஆயிரம் கிலோவை எட்டியுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement