Advertisement

காய்ந்துபோன ஏலச்செடிகள்

கம்பம் : தொடர்ந்து மழை பெய்யாமல் போனது, அதிகபட்ச வெயில் போன்ற காரணங்களால் இடுக்கி ஏலத்தோட்டங்களில் செடிகள் காய்ந்து சருகாகி சாய்ந்துள்ளன. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மறுநடவு செய்ய தயாராகி வருகின்றனர்.கேரளா இடுக்கி மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடியாகிறது.பணப்பயிரான ஏலக்காய் விலை கிடைக்காமல் விவசாயிகளைஅவதிக்குள்ளாக்குவது வாடிக்கையானது.ஆனால் இந்தாண்டு மழை பெய்யாமலும், அதிக வெப்பத்தாலும் விவசாயிகள்கடும் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.

தோட்டங்களில் கிணற்றில்இருந்த தண்ணீரை பயன்படுத்தி விட்டனர். தற்போது தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. ஏலச்செடிகள் கருகி, கீழே சாய்ந்து வருகிறது. இடையில் சிறிதளவு மழை கிடைத்தும் பயனில்லை.மறுநடவு: சாய்ந்துவிட்ட செடிகளை ஒன்றும் செய்ய முடியாது. எனவே அவற்றை அகற்றிவிட்டு மறுநடவு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.அதற்கு ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவாகும்.இரண்டு ஆண்டுகள் கழித்தே மகசூல் கிடைக்கும்.

ஏலவிவசாயிகள் கூறுகையில், இதுவரை இல்லாத கோடையால் அதிகப்படியான வெயிலை ஏலச்செடிகள் தாங்க முடியாமல், கீழே விழுந்துவிட்டது. அவற்றுக்கு உயிர் கொடுக்க கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.மழையும் பெய்யவில்லை. எனவே வேறு வழியின்றி மறுநடவு செய்ய தீர்மானித்துள்ளோம். ஸ்பைசஸ் வாரியம் மறுநடவிற்கான மானியத்தை அதிகரித்து வழங்க முன்வர வேண்டும் என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement