Advertisement

சேதமடைந்த பள்ளி கட்டடம்

தேவதானப்பட்டி : சில்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளது. எனவே இதனை அகற்றி விட்டு புதிதாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது. நாகம்பட்டி, தெற்குகாலனி, தியேட்டர் காலனி ஆகிய பகுதியைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன் மாணவர்களின் வகுப்பறைக்காக கட்டடம் கட்டப்பட்டு மேற்கூறையாக ஓடு போடப்பட்டது. காலப் போக்கில் பராமரிப்பு இன்றி ஓடுகள் உடைந்தன.

மழைக்காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் புகுந்து வருகிறது. இதனால் வகுப்பறையை பயன்படுத்த முடியவில்லை. மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement