Advertisement

எம்.பி., குறித்து அவதூறு எஸ்.பி.,யிடம் காங்., புகார்

நாகர்கோவில்: வசந்தகுமார், எம்.பி., குறித்து, சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குமரி மாவட்ட, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது.


குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் அக்கட்சியினர், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மாலை அளித்த மனு: எங்கள் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார், அதிக வாக்குகள் வித்தியாசத்தில், குமரி தொகுதி, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை பற்றி, சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. 'வசந்தகுமார், எம்.பி., அதிரடி. மாதம், 6,000 ரூபாய், அடுத்த மாதம், 1ம் தேதி முதல் வசந்த் அண்ட் கோவில் வழங்கப்படுகிறது. ஆதார் எண் கொடுத்து, உடனே அருகில் உள்ள வசந்த் அண்ட் கோ கிளையை அணுகவும்' என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'வசந்தகுமார் பெயரை களங்கப்படுத்த வேண்டும்' என்ற கெட்ட நோக்கத்துடன், இந்த தகவல், சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இந்த தகவலை பரப்பிய நபர்கள் மீது, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement