Advertisement

டவுட் தனபாலு

ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ: சட்டசபை இடைத்தேர்தலில், சில தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெற்று இருந்தாலும், இந்த அரசு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, உடனே பதவி விலகவேண்டும்.

டவுட் தனபாலு: 'மே, 23 தேர்தல் முடிவுக்குப் பின், ஆட்சி மாற்றம் வரும்னு, அடிச்சு விட்டுட்டோம்... ஆனால், எங்களால் அதைச் செய்ய முடியலை... பெரிய மனசு பண்ணி, நீங்களே ராஜினாமா செஞ்சு, எங்க வாக்கை காப்பாத்துங்க'ன்னு, கெஞ்சிக் கேட்டுப் பாருங்களேன்... இதுல எதுக்கு, இவ்வளவு வீராப்பு என்பது தான், என்னோட, 'டவுட்!'


பா.ம.க., நிறுவனர்,ராமதாஸ்: தேர்தல் போரில் தோற்றாலும், பா.ம.க., களத்தை இழக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்து, அடுத்து வரும் தேர்தலில், வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

டவுட் தனபாலு: 'இனி வரும் காலங்களில், எந்தக் கட்சி வெற்றி பெறும்னு, துல்லியமாகக் கணித்து, கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு, அதனோடு கூட்டணி வைக்கப் போறீங்களா... இதைத் தவிர, வேறு என்ன செய்திடப் போறீங்க'ன்னு, உங்களின் கடந்த கால, 'வரலாறு' தெரிந்தவர்கள், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, நான் முன்வந்தேன். ஆனால், கட்சி அதை நிராகரித்துவிட்டது.

டவுட் தனபாலு: எத்தனை பேருங்க இப்படிக் கிளம்பி இருக்கீங்க... உங்க சொந்த கட்சியில், உங்க விருப்பத்தைக் கூட நிறைவேற்ற முடியாத நிலையில், நீங்க எப்படி, நாட்டு மக்கள் விருப்பத்தை நிறைவேற்றப் போறீங்கன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க... எதுக்குங்க இந்த நாடகமெல்லாம்...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • tamilan - கோயம்புத்தூர்,இந்தியா

    மோடியை ஆதரித்து பணம்காசு கிடைக்காமல் அவதிப்படுவதைவிட திமுகவிடம் கிடைக்கும் ஊழல்பணம் கிருஸ்தவ அமைப்புகளின் மாத ஊதியம் என சுக போகமாக வாழ ஏற்கனவே முடிவு செய்தே அறிவாலயம் சென்றார்.....

  • Bhaskaran - Chennai,இந்தியா

    வைகோ அவர்களே என்பழையநண்பர் மோடி அப்படீன்னு ஏதேனும் பேசி வருவாய்க்கு வழிபார்க்காமல் இன்னும் காவி ஹிந்துமதம் அப்படீன்னு பேசிக்கொண்டு இருக்கவேண்டாம்

Advertisement