Advertisement

செட்டிநாடு பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சந்திப்பு

காரைக்குடி : செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் படித்த மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் குடும்பத்தாருடன் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.இக்கல்லுாரியில் கடந்த 1990 - 93 ம் ஆண்டில் படித்த 85 மாணவர்கள், முகநுால் மற்றும் 'வாட்ஸ் அப்' மூலம் அறிமுகமாகினர். அதில் பழைய மாணவர்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என முடிவு செய்து, நேற்று குடும்பத்தாருடன் கல்லுாரியில் கூடினர். அனைத்து மாணவர்களும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த மாணவர்கள், கல்லுாரிக்கு தேவையான நிதி உதவிகளை அளிப்பது என முடிவு செய்தனர். மேலும், குடும்பத்தாருடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement