Advertisement

இடையமேலுார் ரோட்டில் மருந்து கழிவுகள்

சிவகங்கை : இடையமேலுாரில் ரோட்டோரத்தில் மருத்துவ கழிவு, மருந்து பாட்டில்களை வீசி சென்றுள்ளதால், இப்பகுதியினருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இங்குள்ள தனியார் கிளினிக்குகள், விதியை மீறி மெடிக்கல் ஷாப்களில் பயன்படுத்தும் ஊசி மருந்து பாட்டில்கள், ஊசிகளை முறைப்படி மருத்துவ கழிவுகளுடன் அனுப்ப வேண்டும். ஆனால் இங்குள்ளவர்கள் விதிகளை மீறி மருந்து கழிவு, போடப்பட்ட ஊசி கழிவுகள், மருந்து பாட்டில்களை ரோட்டிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனால் மழைக்காலத்தில் மருந்துகள் நிலத்தில் பரவிவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. அப்பகுதியினர் இடையமேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்தும் மருத்துவ கழிவுகளை மேலுார் ரோட்டில் கொட்டுவதாக தெரிவிக்கின்றனர். இடையமேலுார் ஊராட்சி நிர்வாகம் மருத்துவ கழிவுகளை ரோட்டில் கொட்டுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement