Advertisement

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கும் அறையின்றி தவிப்பு

திருப்புத்துார் : அரசு மருத்துவமனைகளில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர், பணியாளர்களுக்கு தங்கும் அறை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளை மையமாக வைத்து 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் டிரைவர், முதலுதவி தொழில்நுட்ப உதவியாளர் பணிபுரிகின்றனர். ஒரு மருத்துவமனைக்கு குறைந்தது 2 முதல் 4 ஆம்புலன்ஸ்கள் வரை பயன்படுத்தப்படுகின்றன. விபத்து காலங்கள், பிற உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு உள்ளாகும் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பர். மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து வருவர். இதன் மூலம் விபத்தில் சிக்குவோர், கர்ப்பிணிகள் பெரிதும் பயன் அடைந்து வந்துள்ளனர். இது போன்று குறைவான சம்பளத்தில் சேவை செய்து வரும் ஆம்புலன்ஸ் டிரைவர், உதவியாளர்கள் தங்குவதற்கு மருத்துவமனைகளில் போதிய இடவசதியில்லை. குறிப்பாக பெண் உதவியாளர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கூட போதிய கழிப்பறை, தங்கும் அறைகளின்றி தவிக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் தங்கும் அறை அமைத்து தர வேண்டும். இதுதவிர ஆம்புலன்ஸ்களை பராமரிக்கவும், 108 சேவைக்கான தனி அலுவலகம் அமைத்து தர வேண்டும் என 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement