Advertisement

ஓய்வு மருத்துவ பணியாளர் சந்திப்பு

திருப்புத்துார் : பிள்ளையார்பட்டியில் மருத்துவதுறை ஓய்வு பெற்ற பணியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. மாநில அளவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுரேந்திரன், சுவாமிநாதன், சீதாராமன், தர்மலிங்கம் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. யோகா குறித்து செயல் விளக்கம் தரப்பட்டது. நலிவுற்ற குடும்பங்களுக்கு மருத்துவ, கல்வி நிதி உதவிகள் அளிப்பதென தீர்மானித்தனர். பின்னர் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, பட்டமங்கலம் உள்ளிட்ட கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement