Advertisement

மானியத்தில் தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக ரூ.24.22 லட்சம் மோசடி

சிவகங்கை : காரைக்குடியில் மானியத்தில் தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக கூறி 24.22 லட்ச ரூபாய் மோசடி செய்த 3 பேர்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

காரைக்குடியில் வித்தாராம் அறக்கட்டளை தலைவி கஸ்துாரி. இவர், பெண்களுக்கு தையல் மிஷின், மானியத்தில் மகளிர் டூவீலர் வாங்கித்தருவாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி பிப்.,19 ம் தேதி செஞ்சை சீனிவாசன் மனைவி தீபாம்பிகை 39, மற்றும் அவருடன் சேர்த்து 28 பேர்கள் 7.56 லட்ச ரூபாயை அறக்கட்டளையில் பணிபுரிவதாக கூறிய மருதுபாண்டி மனைவி ராதிகா, சுப்பிரமணியன் மகன் சுந்தரம், ஜோதிபாண்டீஸ்வரன் ஆகியோரிடம் கொடுத்தனர். ஆனால் சொன்னபடி தையல் மிஷின், டூவீலர்களை வாங்கித்தரவில்லை. இது குறித்து தீபாம்பிகை விசாரித்த போது, மூவரும் சேர்ந்து பலரிடம் மானிய தையல் மிஷின், டூவீலர் வாங்கி தருவதாக கூறி, 24.22 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து தீபாம்பிகை சிவகங்கை எஸ்.பி., ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, எஸ்.ஐ., புனிதன் ஆகியோர் வழக்கு பதிந்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement