Advertisement

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 6 பேர் மீட்பு

நாகர்கோவில்: கேரளாவில், நடுக் கடலில் தத்தளித்த, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள், ஆறு பேர், பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குமரி மாவட்டம், நிரோடி பகுதியைச் சேர்ந்த, ஆல்பி என்பவருக்கு சொந்தமான, நாட்டுப் படகில், ஜூன், 6ம் தேதி, ஆறு மீனவர்கள், கேரள மாநிலம், நீண்டகரை துறைமுகத்திலிருந்து, மீன் பிடிக்க சென்றனர்.கரையில் இருந்து, 60 கி.மீ தொலைவில், மீன்பிடித்த போது, படகு பழுதாகி, நடுக்கடலில் தத்தளித்தனர்.
அவ்வழியே சென்ற, சிங்கப்பூரைச் சேர்ந்த, 'ஆசிய எமறால்டு - -3' என்ற, சரக்கு கப்பலின் ஊழியர்கள், கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு, இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர்.பின், அவர்களை, கொச்சி துறைமுகத்தில், நேற்று முன்தினம் இரவு, கரை சேர்த்தனர். அங்கிருந்து மீனவர்கள், தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement