Advertisement

திற்பரப்பு அருவியில் வெள்ளம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழை, 8ல் துவங்கியது. இரவில் நல்ல மழையும், பகலில் மேக மூட்டம், சாரல் என இருந்தாலும், மலையோர கிராமங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.பாலமோரில் அதிகபட்சமாக, 7.4 செ.மீ., மழை பதிவானது. திற்பரப்பில், 6.6செ.மீ., மழை பதிவானது.அருவியில் நேற்று காலை, தண்ணீர் கொட்டத் தொடங்கியது. குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement