Advertisement

ரூ.95 லட்சத்தில் சீரமைத்த சாலை 5 மாதத்தில் பல்லிளித்த பரிதாபம்

நாகர்கோவில்:கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணியர், 'சன்செட் பாயின்ட்' செல்ல வசதியாக, ஐந்து மாதங்களுக்கு முன், 95 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட சாலை, சேதமடைந்து உள்ளது.

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். 2018ம் ஆண்டில் மட்டும், 20.49 லட்சம் சுற்றுலா பயணியர் வந்தனர்.இதை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் கன்னியாகுமரியில், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய, மாநில அரசுகள், சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக, கடற்கரை சாலை, சிலுவை நகரில் இருந்து, 'சன்செட் பாயின்ட்' வரை செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க, பேரூராட்சி சார்பில், 95 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த சாலை வழியாக, தினமும் மாலை வேளைகளில், சூரிய அஸ்தமனத்தை காண, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். பழுதான இந்த சாலை, ஐந்து மாதங்களுக்கு முன், அலங்கார வண்ண கற்கள் பதித்து சீரமைக்கப்பட்டது.


தற்போது, ஐந்து மாதங்கள் கூட முடிவுறாத நிலையில், அலங்கார வண்ண கற்கள் பதிக்கப்பட்ட சாலை, இரு நாட்களாக பெய்த மழையில், சேதம் அடைந்துள்ளது.இது குறித்து, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பழுதான சாலையை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

    ஆளுங்கட்சிக்கு காவடி தூக்குற ஆளுங்க “லைன்”..ல நில்லுங்க... மத்தவங்களெல்லாம் கழுவி.. கழுவி ஊத்துவதற்கு வசதியாக...? இதுல சில ........................... மேதாவிகள்... இதெற்கெல்லாம் காரணம் தி.மு.க.தான்...னு வந்து ஒப்பாரி வைக்கும் பாருங்களேன்....

Advertisement