Advertisement

தடை முடிந்தது சீற்றம் முடியவில்லை: மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதில் சிக்கல்

நாகர்கோவில்:மீன்பிடி தடைகாலம் முடிந்தாலும் கடல் சீற்றத்தால் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மீன் பிடி தடைகாலம் ஏப். 15 ல் துவங்கி 60 நாட்கள் முடிந்த நிலையில் இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் தயார் நிலையில் உள்ளன.



ஆனால் தென் மேற்கு பருவமழை துவங்கியது முதல் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அதனால் 'சீற்றம் அதிகமாக இருந்தால் இன்று கடலுக்கு செல்ல மாட்டோம்; சீற்றம் இல்லை என்றால் கடலுக்கு செல்வோம்' என கன்னியாகுமரி மீனவர்கள் தெரிவித்தனர்.


கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி சன்செட் பாயின்டில் போடப்பட்டிருந்த அலங்கார கற்கள் சேதம் அடைந்துள்ளது. மார்த்தாண்டம் துறையில் 35-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. நீரோடி- வள்ளவிளை சாலை மணலால் மூடப்பட்டுள்ளது. நீரோடி வியாகுல மாதா ஆலய கொடிமரம் சாய்ந்தது. கடற்கரையோரம் வசிக்கும் மீனவ மக்கள் பாதுகாப்புக்காக உறவினர் வீடுகளில் சென்று தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement