Advertisement

எஸ்.ஐ. தாய் உட்பட இருவரிடம் 14 பவுன் நகை பறிப்பு

நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் போலீஸ் எஸ்.ஐ.யின் தாய் உட்பட இருவரிடம் 14 பவுன் தங்க செயின் பறிக்கப்பட்டது.


ஈத்தாமொழியை சேர்ந்தவர் காந்திமதி 64. நேற்று காலை ஈத்தாமொழி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் காந்திமதி அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்து சென்றனர்.


மேலும் தெரிசனங்கோப்பை சேர்ந்த ராமையாபிள்ளையின் மனைவி பெருமாள் பிள்ளை 82 தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது பைக்கில் வந்த நபர் அவர் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டார். இவரது மகன் ஈஸ்வரன் போலீஸ் எஸ்.ஐ. யாக பணியாற்றி வருகிறார்.தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement