Advertisement

கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

நாகர்கோவில்:நாகர்கோவிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து மூன்று லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.


குலசேகரம் அருகே பளுகல் மூவாற்றுகோணத்தை சேர்ந்தவர் அபிலாஷ் 37. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லுாரி அருகே ரோட்டில் காரை பார்க்கிங் செய்து கடைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது காரின் பின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. பையில் வைத்திருந்த மூன்று லட்சம் ரூபாய் மற்றும் இரு அலைபேசிகள் திருட்டு போயிருந்தது. வடசேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement