Advertisement

திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் கிரேன் வசதி

Share
திருப்புவனம் : மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை இடையே திருப்பாச்சேத்தி 'டோல்கேட்டில்' விபத்தில் சிக்கும் வாகனங்களை மீட்க கிரேன், ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளன.மதுரை - ராமநாதபுரம் இ.சி.ஆர்., வரை 115 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைத்து, வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதில், 9 இடங்களில் மேம்பாலம், 37 இடங்களில் சிறிய பாலங்கள் கட்டியுள்ளனர். இது தவிர ஓய்வு அறை, வாகன நிறுத்தும் 'டிரேக் பே' வசதிகள் செய்துள்ளனர். மதுரையில் இருந்து 30 கி.மீ., துாரத்திலும், 98 கி.மீ., துாரத்தில் இரு இடங்களில் 'டோல்கேட்' அமைத்துள்ளனர். அதில் திருப்பாச்சேத்தியில் உள்ள 'டோல்கேட்' அருகே வாகன விபத்துக்கள் நேரிட்டால், உடனே மீட்பு பணிகளை மேற்கொள்ள புதிதாக கிரேன் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement