Advertisement

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைப்பாளர், சமையலர் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கூடுதல் பணி வழங்கப்படும் போது அரசு ஆணைப்படி 3 கி.மீ., தொலைவுக்குள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் சுரேஷ், துணைத்தலைவர் முத்துக்குமார், பொருளாளர் பானுமதி, ஒன்றிய துணை செயலாளர்கள் முருகேசன், சாந்தி, பொருளாளர் ரமணி, சாலைப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பன், அரசு ஊழியர் சங்க வட்டத்தலைவர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய துணைத்தலைவர் சுசீலா நன்றி கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement