Advertisement

உங்களை எல்லாம் திருத்தவே முடியாது; வாலிபரிடம், இரிடியம் மோசடி

நாகர்கோவில் : 'வீட்டில், 'இரிடியத்தை' வைத்தால், செல்வம் பெருகும்' எனக் கூறி, வாலிபரிடம்,50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, மூவரிடம்போலீசார் விசாரித்து வருகின்றனர்.


குமரி மாவட்டம், சுவாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர், அரவிந்த், 30; லாரியில், தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார்.

முன்பணம்:



கடந்த, 15ம் தேதி, இளைஞன் ஒருவன், அரவிந்திடம், 'இரிடியம் வாங்கி, வீட்டில் வைத்தால், செல்வம் பெருகும். அதை, வெளிநாடுகளில் விற்றால், கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளான்.இதை நம்பிய அரவிந்தை, சுசீந்திரம், சீயோன்புரம் பகுதியைச் சேர்ந்த, ஜான் ஆல்வின் பிரபு, 35, என்பவரிடம், அழைத்து சென்றான்.அப்போது, ஜான் ஆல்வின் பிரபு, தற்போது, 25 ஆயிரம் ரூபாய், முன்பணம் தரும்படியும், இரிடியம் கையில் கிடைத்ததும், மேலும், 25 ஆயிரம் ரூபாய் தருமாறும் கூறியுள்ளார்.

வழக்கு பதிவு:



இதையடுத்து அரவிந்த், இரு தவணைகளில், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அவர்கள், இரிடியம் தராமல், அரவிந்தை ஏமாற்றிய தாக, கூறப்படுகிறது.இதையடுத்து அவர், அஞ்சுகிராமம் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஜான் ஆல்வின் பிரபு உட்பட, மூவரிடம்விசாரித்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement