Advertisement

குமரி மாவட்ட வாலிபர் ஓமனில் படுகொலை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், ஓமனில் படுகொலை செய்யப்பட்டதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.குமரி மாவட்டம், மாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 32; 'ஏசி' மெக்கானிக். திருமணம் ஆகவில்லை. நான்கரை ஆண்டுகளுக்கு முன், ஓமன் நாட்டுக்கு, பணிக்கு சென்றார்.வெளிநாடு சென்ற பின், இதுவரை, ஊருக்கு வரவில்லை. மாறாக, தாயின் செலவுக்கு மட்டும் பணம் அனுப்பி வந்தார். ஓமனில் உள்ள சலாலா மாவட்டத்தில், பாபு பணிபுரிந்து வந்தார்.

சில தினங்களுக்கு முன், அங்குள்ள பாழடைந்த கட்டடத்தில், உடலில் காயங்களுடன், பாபு துாக்கில் சடலமாக தொங்கியதாக, இங்குள்ள உறவினர்களுக்கு தகவல் வந்தது.இது குறித்து, பாபுவின் உறவினர்கள் கூறியதாவது:பாபு கொலை செய்யப்பட்டதை, அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆயினும், கொலைக்கான காரணம் கூறப்படவில்லை.இருப்பினும், சொந்த ஊரில், வீடு கட்டுவதற்காக, பாபு, தன் சேமிப்பில் அதிகளவு பணம் வைத்திருந்ததாகவும், பணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம்.

கொலையாளிகளை கைது செய்யும்படி, ஓமன் நாட்டுக்கு வலியுறுத்துவதோடு, பாபுவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Naga - Muscat,ஓமன்

    வருந்திகிறேன்.

Advertisement