Advertisement

குமுளி மலைப்பாதையில் தடுப்புச்சுவர்... சேதம்! விபத்து ஏற்படும்முன் சீரமைக்கப்படுமா

கூடலுார்: குமுளி மலைப்பாதையில் உள்ள தடுப்புச் சுவர் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. வாகன விபத்து ஏற்படும்முன் சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதால் வாகனப்போக்குவரத்து அதிகம். லோயர்கேம்பில் இருந்து 2 கி.மீ., துாரத்தில் உள்ள கொண்டை ஊசி வளைவு, 4 கி.மீ., துாரத்தில் உள்ள இறைச்சல் பாலம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடக் கும்.

இப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் அதிகமாக சேதமடைந்துள்ளது. சில இடங்களில் தடுப்புச்சுவர் முழுவதும் பள்ளத்தில் சரிந்துள்ளது. மேலும் தார்ரோடு வரை விரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அது தெரிவதில்லை. இப்பகுதியில் விபத்து ஏற்பட்டால் பல அடி பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபரீதம் ஏற்படக்கூடும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவிட்டால் கூடுதல் மழை பெய்து மலைப்பாதையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

அதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த தடுப்புச்சுவரை தரமாக சீரமைக்க வேண்டும். இதுவரை தடுப்புக்கம்பி அமைக்காமல் உள்ள மற்ற இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement