Advertisement

ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைப்பு; கிராமப்புறத்தினர் தவிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லுாரியில் பட்டப்படிப்பில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆண்டிபட்டி தொகுதியில் ஜெ., வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றதும் 2004 ல் காமராஜர் பல்கலை., ஆண்டிபட்டி உறுப்பு கல்லுாரி துவக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பி.ஏ., பொருளாதாரம் பிரிவில் 120, பி.எஸ்.சி.,கணிதம் பிரிவில் 60, பி.எஸ்.பி.,இயற்பியல் பிரிவில் 80, பி.காம்.,பிரிவில் 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆண்டிபட்டியின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு இக்கல்லுாரி பட்டப்படிப்பு படிப்பதற்கு வசதியாக இருந்தது.இந்நிலையில் நடப்பு ஆண்டு முதல் இது அரசு கல்லுாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை, மதியம் என இரு பிரிவுகளாக செயல்பட்டு வந்த கல்லுாரியில் தற்போது காலையில் ஒரு பிரிவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முதலாம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட்டுள் ளது. நடப்பு ஆண்டில் 170 மாணவ, மாணவிகள் மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்லுாரியில் படிக்க சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த பலரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement