Advertisement

குடிநீர் பிரச்னைக்கு மறியல் தி.மு.க., எம்.எல்.ஏ., கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து நேற்று காலை வடசேரி அண்ணாதுரை சிலை அருகே தி.மு.க., எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக சுரேஷ்ராஜன் கூறியதாவது: தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் பெய்த பின்னரும் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 20 முதல் 28 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னை இல்லை என்று ஆணையர் கூறுகிறார். குடிநீர் பிரச்னையை தீர்க்காவிடில் மாநகராட்சியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும், என்றார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement