Advertisement

ஒழுங்கற்ற சாலைத்தடுப்பால் விபத்து: ஒருவர் பலி

காரைக்குடி : காரைக்குடி கல்லுாரி சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்கற்ற சாலை டிவைடரால் விபத்து ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தில் சென்றவர் டிவைடரின் பக்கவாட்டில் மோதியதில், விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார்.

காரைக்குடி பொன்நகர் பகுதியில் வசிப்பவர் ராஜாராமன் 46. இவர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன மாவட்ட சர்வீஸ் டீலராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்லும் போது கல்லுாரி சாலையில் நடுவில் உள்ள ஒழுங்கற்ற டிவைடரில் இவர் சென்ற இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

வாகனத்தில் வந்த ராஜாராமன் (ஹெல்மெட் அணியவில்லை)துாக்கி எறியப்பட்டு தலையில் காயமடைந்து பலியானார். காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.ரகுபதி,சமூக ஆர்வலர் : நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பில் உள்ள இந்த சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது இல்லை. ஏற்கனவே விபத்தால் சாலையின் நடுவில் உள்ள டிவைடர் பகுதி சேதமடைந்தாலும் அதை சரி செய்வது கிடையாது.

விளம்பர வருவாய் நோக்கத்திற்காக மட்டுமே இந்த டிவைடர்கள் அமைக்கப்படுவது வேதனை தருகிறது. ஒரு மாதத்திற்கு மேலாக இந்த பகுதியில் தெருவிளக்குகள் ஒழுங்காக எரியவில்லை. இரவில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் வெளிச்சமும் இல்லாத நிலையில் டிவைடரில் எச்சரிக்கை ஒளிரும் ஸ்டிக்கரும் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

உடனடியாக ஒழுங்கற்ற முறையில் உள்ள சாலை டிவைடர்களை சரி செய்ய வேண்டும் என்றும் நகராட்சி எரியாத தெருவிளக்குகளை சரி செய்து தர வேண்டும் எனவும் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement