Advertisement

18ம் கால்வாய் கரைப்பகுதியை ஆக்கிரமித்து விவசாயம்

கூடலுார் : கூடலுார் அருகே 18ம் கால்வாயின் கரைப்பகுதியில் ஆக்கிரமித்து மரங்கள் வளர்த்து விவசாயம் செய்து வருகின்றனர். அதனால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.லோயர்கேம்பில் துவங்கி போடி மீனாட்சிபுரம் வரையுள்ள 18ம் கால்வாய்த்திட்டத்தில் நேரடி பாசனம் கிடையாது.

இக்கால்வாய் செல்லும் பாதையில் உள்ள 42 குளங்கள் நிரப்பப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்காக இத்திட்டம் துவக்கப்பட் டது.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் பெரியாறு அணையில் நீர் இருப்பைப் பொருத்து, இக்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது நீர்திறப்பு இல்லாததால், கூடலுார் அருகே இக்கால்வாயின் கரைப்பகுதி பல இடங்களில் ஆக்கிரமித்து இலவசமரம், வாழை உள்ளிட்டவைகளை வளர்த்துவருகின்றனர். இதற்காக கரைகள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கால்வாயும் சுருங்கியுள்ளது.அடுத்து இக்கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் தண்ணீர் வெளியேற முடியாமல் கரைப்பகுதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு முன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement