Advertisement

நில மோசடி குற்றவாளிகள் பட்டியலில் சமாஜ்வாதி எம்.பி., பெயர் வெளியீடு

ராம்பூர்: உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி, எம்.பி.,யின் பெயர், அரசு வெளியிட்ட நில மோசடி குற்றவாளிகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியினர் போராட்டம்நடத்தினர்.உ.பி.,யில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ராம்பூர் லோக்சபா தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர், அசம் கான். இவர் மீது, பல நில மோசடி புகார்கள் உள்ளன. இதையடுத்து, மாநில அரசு நடத்தும், நில மோசடி குற்றவாளிகள் பற்றிய இணையதளத்தில், அசம் கான் பெயர் வெளியிடப்பட்டது.இதையடுத்து, உ.பி., சட்டசபையில், சமாஜ்வாதி கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர், அகமது ஹசன், ''சமாஜ்வாதி, எம்.பி., மீது, பொய் வழக்கு போடப்பட்டுள்ளது,'' என்றார்.


இது பற்றி முதல்வர் ஆதித்யநாத் கூறியதாவது:அசம்கான் மீது, 12க்கும் மேற்பட்ட, நில மோசடி வழக்குகள் உள்ளன. ராம்பூர் மாவட்ட கலெக்டர் விசாரித்து, நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஆட்சியில், நிலமோசடிக்கு புகழ் பெற்றது ராம்பூர் தொகுதி. நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள், புகார் மனு கொடுத்துள்ளனர். அசம் கான் சட்டசபை உறுப்பினர் அல்ல. அவருக்காக இங்கு அமளி செய்வது தேவையற்றது.இவ்வாறு, அவர் கூறினார்.சமாஜ்வாதி, எம்.எல்.ஏ.,க்களின் அமளி தொடர்ந்ததால், திங்கள்கிழமை வரை, சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    அப்போ டாஸ்மாக் நாட்டில் கூட இப்படி வெளியிட்டால் அ.தி.மு.க, தி.மு.க முன்னாள் இந்நாள் எம் எல் ஏ, எம் பி க்கள் இருப்பார்கள் என்று தான் இது வரை இப்படி வெளியிடவில்லை என்று ஆணித்தரமாக கூறமுடியும் போல் இருக்கின்றது. ஆசாம் கான் தவறே செய்யவில்லை, ஏன் ஏன்றால் அவர் ஒரு முஸ்லீம் அவர் பாகிஸ்தான் சொல்படித்தான் நடப்பார் பாகிஸ்தானுக்காக??அது எப்படி இந்தியா ஆணையிடலாம்??அது மிகவும் தவறு???என்ன ஆஸம் கான் நான் சொல்வது சரி தானே????

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    ராஜ் சார்....ஏன் திமுக கம்பெனியின் மகாசபை உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட கேட்கிறீர்கள் என சொல்வீர்களா?......

  • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

    Well qualified politician, What is the use of issuing this news? Expediting the criminal actions against such criminal activities is the need of the hour.

  • blocked user - blocked,மயோட்

    திமுகவில் கிளை சமாஜ்வாதி கட்சி போல இருக்கிறது.

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    புடிச்சி உள்ள போடுங்க மொதல்ல

Advertisement