Advertisement

'டவுட்' தனபாலு

தி.மு.க., தலைவர், ஸ்டாலின்: 'சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்' என்பர். கருவூலத்தில் இருந்தால் தான், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும். அரசு கருவூலம் காலி; அவர்களின் இதயமும் காலி.

டவுட் தனபாலு: வாஸ்தவமான பேச்சு தான்... அப்புறம், எதை வைத்து, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கடன்கள் தள்ளுபடி; அனைவருக்கும் உதவித்தொகை'ன்னு, அடுக்கினீங்க... உண்மையிலேயே, அரசின் நிதிநிலை மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், வருவாய் பெருக்கத்துக்கு வழி சொல்ல வேண்டியது தானே... அதை ஏன் மாட்டேங்குறீங்க என்பதுதான், என்னோட, 'டவுட்!'

காங்., மூத்த தலைவர், நட்வர் சிங்: நேரு குடும்பத்தைச் சேராதவர்கள், காங்கிரஸ் தலைவரானால், அடுத்த, 24 மணி நேரத்தில், கட்சி உடைந்து, சிதறி விடும்.


டவுட் தனபாலு: எதை அடிப்படையாக வைத்து, இதைச் சொல்றீங்க... நாட்டுல இருக்குற பெரும்பாலான கட்சிகள், காங்கிரசில் இருந்து பிரிந்தவை தான்... அவை, நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து உருவானவை தான்... அதனால்தான், இந்த, 'டவுட்!'

த.மா.கா., தலைவர், வாசன்: தமிழகத்தில் த.மா.கா., மரியாதைக்குரிய, எல்லோராலும் மதிக்கக் கூடிய கட்சியாக விளங்கி வருகிறது. நாம் ஆளும் கட்சியாக மாற வேண்டும். படிப்படியாக அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும்.


டவுட் தனபாலு: கடுமையான குற்றச்சாட்டு, கூட்டணி பேரம் போன்ற செயல்களில், உங்க கட்சி ஈடுபடுவதில்லை என்பது சரி தான்... ஆனால், இதுவரை நீங்க சந்தித்த தேர்தல்களில், என்ன முன்னேற்றம் கண்டிருக்கீங்க... அரசில் பங்கு அளித்தால் மட்டுமே, சட்டசபை தேர்தலில் கூட்டணின்னு சொல்லத் தயங்குற நீங்க, ஆட்சி அமைப்பதைப் பத்தி பேசினால், எப்படி நம்பிக்கை வரும்கறது தான், என்னோட, 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement