dinamalar telegram
Advertisement

ரூ.2 லட்சம் வழங்கி இன்ப அதிர்ச்சி தந்த துணை முதல்வர்!

Share
Tamil News
ரூ.2 லட்சம் வழங்கி இன்ப அதிர்ச்சி தந்த துணை முதல்வர்!

''சீக்கிரமே, தலைமை தேர்தல் அதிகாரியை மாத்த போறாவ வே...'' என்ற அறிவிப்புடன், பெஞ்சுக்கு வந்தார், பெரியசாமிஅண்ணாச்சி.''தமிழகத்துலயா பா...'' எனக் கேட்டார், அன்வர் பாய்.''ஆமாம்... இப்ப, தலைமை தேர்தல் அதிகாரியா, சத்யபிரதா சாஹு இருக்காரு வே... இவருக்கு, இந்தப் பதவியில நீடிக்க விருப்பம் இல்லையாம்...''அதனால, வேலுார் தேர்தல் முடிஞ்சதும் அல்லது, இரண்டு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிஞ்சதும், இவரை மாத்திட்டு, புதுசா ஒருத்தரை நியமிக்க, தலைமை தேர்தல் கமிஷன் முடிவு பண்ணியிருக்கு வே...'' என்றார் அண்ணாச்சி.''பரிசு பொருட்களை அள்ளிட்டு போயிட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர் பாய்.''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''சட்டசபையில நடந்த மானியக் கோரிக்கையில, அந்தந்த துறைகள் சார்புல, எம்.எல்.ஏ.,க்களுக்கு விதவிதமான பரிசு பொருட்கள் குடுப்பாங்க... 'இதை, தி.மு.க.,வினர் யாரும் வாங்கக் கூடாது'ன்னு, ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்காரு பா...''இதனால, அந்தக் கட்சிக்காரங்க, கையை கட்டிட்டு இருந்தாங்க... ஆனா, சபை முடிஞ்ச கடைசி நாள்ல, எல்லாரும், அதுவரை வாங்காத பரிசு பொருட்களை, மொத்தமா வாங்கிட்டாங்க... 'சூட்கேஸ், டிராலி பேக், வாட்டர் ஹீட்டர்'னு பல பரிசு பொருட்களை, கையெழுத்து போட்டு வாங்கி, கார்கள்ல துாக்கி போட்டுட்டு, ஊருக்கு பறந்துட்டாங்க பா...'' என்றார் அன்வர் பாய்.''சட்டசபை சம்பந்தமா, என்கிட்டயும் ஒரு தகவல் இருக்குங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''சட்டசபையில, மானியக் கோரிக்கை மீது, 20 நாட்கள் விவாதம் நடந்துச்சு... சபை பாதுகாப்பு பணியில, வெள்ளை சீருடையில, சென்னை சிட்டி போலீசார் ஈடுபடுவாங்க... வழக்கமா, மதியம், 2:00 மணிக்குள்ள சபை முடிஞ்சு, அவங்களும் வீட்டுக்கு போயிடுவாங்க...''வேலுார் தேர்தல் பிரசாரத்துக்கு, எல்லா கட்சியினரும் போகணும்கிறதால, இந்த முறை, சபையை ராத்திரி, 9:00 மணி வரைக்கும் கூட விறுவிறுப்பா நடத்தினாங்க... இதனால, சபை பாதுகாவலர்கள், காலையில இருந்து ராத்திரி வரைக்கும், ஓய்வே இல்லாம வேலை பார்த்தாங்க...''கூட்டத்தொடர் முடியுறதுக்கு முதல் நாள், சபை காவலர்களின் தலைமை அதிகாரியை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், தன் அறைக்கு அழைச்சிருக்கார்... அவரும் பதறியடிச்சு ஓடினாருங்க...''அப்ப, அவரிடம், 2 லட்சம் ரூபாயை குடுத்த பன்னீர், 'சபை பாதுகாப்பு போலீசார் எல்லாரும், சிறப்பா வேலை பார்த்தீங்க... எல்லாரும் இந்த தொகையை பிரிச்சு எடுத்துக்கங்க'ன்னு சொல்லி அனுப்பியிருக்காருங்க...'' என்றார் அந்தோணிசாமி.அரட்டை முடிய, நண்பர்கள் நகர்ந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  ஒவ்வொரு வருஷமும் சூட்கேஸ், டிராலி பேக், வாட்டர் ஹீட்டர் ன்னு திருப்பி திருப்பி வாங்கிட்டுப் போறாங்களே ............ அவ்வளவையும் வெச்சுகிட்டு என்ன பண்ணுவாங்க? ஒரு வேளை வித்துடுவாங்களோ?

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  பிரிச்சு எடுத்துக்கிட்டாங்களா இல்லை பிரிக்காமே எடுத்துகிட்டாரா?

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  கட்சி தலைவர் ஸ்டாலினோட சூட்கேஸ், டிராலி பேக், வாட்டர் ஹீட்டர்'னு பல பரிசு பொருட்களை, யாரு கையெழுத்து போட்டு வாங்குனாங்க?

 • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

  திருட்டு திமுக என பல வாசகர்கள் சொல்வது உண்மைதான்......

  மேலும் செய்திகள் :

Advertisement