Advertisement

தூய்மை இந்தியா திட்டப்பணியில் வேலூர் முதலிடம்: மத்திய இணை செயலாளர் தகவல்

Share
வேலூர்: ''தூய்மை இந்தியா திட்டப்பணியில், வேலூர் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது,'' என, மத்திய இணை செயலாளர் ஜிந்தால் பேசினார்.
வேலூர் மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து, மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடல் கூட்டம், வேலூர் காட்பாடி காந்திநகர் வரிவசூல் மையத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் சிவசண்முகம் தலைமை வகித்தார். மண்டல உதவி ஆணையர் மதிவாணன் வரவேற்றார். தூய்மை இந்தியா திட்ட இயக்க, மத்திய அரசின் இணை செயலாளர் ஜிந்தால் பேசியதாவது: மிருகங்கள் குப்பைகளை உருவாக்காது. மனிதனால் மட்டும் குப்பை உருவாக்கப்படுகின்றன. மனிதன் ஒரு இடத்தில் இரண்டு நிமிடம் இருந்தால், ஐந்து கிராம் குப்பை உருவாகுகிறான். எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றாலும் மனிதன் குப்பைகளை உருவாக்குகிறான். குப்பைகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது. இதை தடுக்க, மத்திய அரசு சார்பில், பிரதமர் மோடி அறிவித்த, தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டப்பணியில், வேலூர் மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. குப்பை தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றன. தூய்மை மாநகராட்சியாக, வேலூர் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது அங்கிருந்த மேஜை மீது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வைத்திருந்தனர். இதை பார்த்த இணை செயலாளர் ஜிந்தால், பிளாஸ்டிக் பாட்டில்கள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. நீங்களும் இதை பயன்படுத்த வேண்டாம், உடனடியாக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அகற்றும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், நகர்நல அலுவலர் மணிவண்ணன், ஸ்மார்ட் சிட்டி பொறியாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • jolnabag -

    தயவு செய்து வேலூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளையும் ஆய்வு செய்யுங்கள்

Advertisement