Advertisement

சீனா நாட்டு பட்டாசு விற்க தடை

சத்துவாச்சாரி: வேலூர் மாவட்டத்தில், சீனா நாட்டு பட்டாசு விற்க தடை செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் பேசினார்.


பட்டாசு விற்பனை மற்றும் தயாரிக்கும் உரிமம் பெற்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே, பட்டாசு வகைகள் இருப்பு வைக்க வேண்டும். பட்டாசு குடோன்களுக்கு, தனி வழி அமைக்க வேண்டும். உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மட்டும்தான் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். சீனா நாட்டில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வேலூர் மாவட்ட எஸ்.பி., பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள், தயாரிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement