Advertisement

கிராமத்துக்கும் காவிரி குடிநீர் வினியோகிக்க திட்டம்

திருப்பத்தூர்: ''கிராம பகுதிகளுக்கு, காவிரி குடிநீர் வினியோகிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது,'' என, அமைச்சர் வீரமணி பேசினார். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே, பாலனாங்குப்பம் கிராமத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர் முகாம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் வீரமணி பேசியதாவது: காவிரி கூட்டு குடிநீர் திட்டம் திருப்பத்தூரில் இருந்து, அரக்கோணம் வரை செல்கிறது. கிராம பகுதிகளுக்கும், காவிரி குடிநீர் வினியோகிக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைத்து, நிறைவேற்றப்படும். இதனால், சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைக்கும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, இனிமேல் கிராமங்களில் யாரும், ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement