Advertisement

தமிழக கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது

Share
வேலூர்: ''தமிழக கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது,'' என, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் கூறினார். இது குறித்து வேலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும், அவர்கள் ஹிந்தி திணிப்பை தான் புகுத்துகின்றனர். எல்லா மாநிலத்திலும் சட்டம் இயற்றி, ஹிந்தியை திணிப்பது சாத்தியமில்லை. அது பல விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது, மத்தியில் உள்ள அரசு, 'ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே ஆட்சி, ஒரே குடும்ப அட்டை, ஒரே கல்வி' என, எல்லாவற்றையும் புகுத்த நினைக்கின்றனர். அது முடியாது. தமிழக கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. எட்டாம் வகுப்பிற்கும், ஐந்தாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு என கூறுவது சாத்தியமில்லை. அமைச்சர்கள் பொதுத்தேர்வை ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் எழுதி விட்டா வந்தார்கள். இது தேவையில்லை. தமிழக கல்வித்துறை குழப்பத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, எம்.பி.,க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த் உடனிருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement