Advertisement

ஒரு மரத்தின் வேரை போன்றது தமிழ் மொழி

Share
ராணிப்பேட்டை: ''ஒரு மரத்தின் வேரை போன்றது தமிழ்மொழி,'' என, தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசினார். வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அரசினர் மகளிர் கல்லூரி நுழைவு வாயில் அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. ராணிப்பேட்டை, தி.மு.க., எம்.எல்.ஏ., காந்தி தலைமை வகித்தார். எம்.பி., கனிமொழி அடிக்கல் நாட்டி பேசியதாவது: ஒரு பெண்ணுக்கு கல்வி அளிப்பது பல தலை முறைகளை, இந்த சமுதாயத்தை மாற்றுவதற்கான அடித்தளம். கல்வி கற்ற பெண் அந்த பணிகளை முன்னின்று செய்வாள். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பலசாலிகளே ஆள முடியும் என்ற நிலை மாறி, தற்போது அறிவே பலமாக பார்க்கப்படுவதால், இதில் எந்த பெண்களும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல. மாணவியர், தமிழ் மொழியின் அவசியத்தை மறந்து விடக்கூடாது. தமிழ் மொழி, ஒரு மரத்தின் வேரை போன்றது. அது கலாசாரம் மற்றும் பயன்பாட்டின் அடையாளம். பல்வேறு பிரிவினைகளையும் தாண்டி, அனைத்து மக்களையும் இணைத்து வைக்கும் ஒரு கயிறு போன்றது. எதிர்கால தலைமுறையினர் தமிழ் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement