Advertisement

ராணுவ வீரர் மனைவிடம் 35 பவுன் நகை பறிப்பு

ஆம்பூர்: ஆம்பூரில் வங்கி லாக்கரில் வைக்க, ராணுவ வீரரின் மனைவி கொண்டு வந்த, 35 பவுன் நகையை, பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்தவர் சீனிவாசன், 45. ராணுவ வீரரான அவர், பூனாவில் பணிபுரிகின்றார். அவர் மனைவி நிர்மலா, 30, தனியாக வீட்டில் வசிக்கிறார். இந்நிலையில், வீட்டில் இருந்த, 35 பவுன் நகை மற்றும், 45 ஆயிரம் ரூபாயை ஆம்பூரில் உள்ள கனரா வங்கியில் உள்ள தனது லாக்கரில் வைக்க, இரு சக்கர வாகனத்தில் நேற்று காலை, 11:00 மணிக்கு சென்றார். வங்கி முன்பு, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பெட்டியில் பணம், நகை இருந்த பையை எடுத்தார். அப்போது, ஒருவர் கீழே, 20 ரூபாய் நோட்டு விழுந்துள்ளது என்று கூறினார். அந்த பணத்தை, நிர்மலா எடுத்தார். அப்போது, அந்த நபர் பையை பறித்துக்கொண்டு தப்பியோடினார். ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement