Advertisement

வேலூர் மாவட்டத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

Share
சத்துவாச்சாரி: சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.

தமிழக சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் உறுப்பினர்கள் ராஜேந்திரன், நடராஜன், உதயசூரியன், பழனிவேல், தியாகராஜன், பாஸ்கர், பாரதி, மோகன், ராஜா ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று வேலூர் மாவட்டத்தில் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். காட்பாடி காந்தி நகரில் மத்திய அரசின் அம்மூர் குடிநீர் திட்டப்பணிகள், சத்துவாச்சாரியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை பொது கணக்குக்குழு தலைவர் துரை முருகன், உறுப்பினர்கள் மற்றும் சட்டசபை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் பத்மகுமார், துணை செயலாளர்கள் தேன்மொழி, ரேவதி, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது: வேலூர் மாநகராட்சியின் சில இடங்களில், குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய இடத்தை சரியாக மூடாததால், பல இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளன. ஒப்பந்தம் எடுத்தவர்கள் விரைவில் ரோடு போட உத்தரவிடப் பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விவாதிக்க, மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில், ஆய்வுக்கூட்டம் இன்னும் ஒரு மாதத்தில் நடந்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement