Advertisement

பெங்களூருக்கு கடத்த முயன்ற அரிசி பறிமுதல்

பேர்ணாம்பட்டு: பெங்களூருக்கு, கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு தாலுகா வருவாய்த்துறையினர் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேர்ணாம்பட்டு பஸ் ஸ்டாண்டில், புதர் மறைவில் மறைத்து வைத்திருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருக்கு பஸ்சில் கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்தியவர்கள் குறித்து வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement