Advertisement

பொதுவக்குடி கண்மாயில் அழியும் பனை மரங்கள்

பரமக்குடி : மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் வருமானம் தரக்கூடிய பனை மரங்கள் விவசாயிகளை கஷ்டமான நேரங்களில் காத்துள்ளன. பனை ஓலை, மட்டை, பனங்கிழங்கு, பழம், நுங்கு, பதநீர், பனை துார் என அடி முதல் முடி வரை வருமானம் கொடுப்பதாக பனை உள்ளது.


கடலோரங்கள் மற்றும் கண்மாய்களில் மண் அரிப்பை தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. தொடர்ந்து பருவ மழை பொய்த்து வருவதால் இந்த பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளன. பனை மரங்கள் வளர்ந்துள்ள நீர்நிலைப்பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது.இந்நிலையில், பரமக்குடி பகுதிகளில் பனைகளை வெட்டி அழிக்கின்றனர். மீண்டும் பனை விதையை நட்டாலும் அதன் பலன் கிடைக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

வானம் பார்த்த பூமியில் நெல், மிளகாய், பருத்தி விளைச்சல் குறைந்துள்ள நிலையில், பனையை நம்பி இருந்த விவசாயிகள் வேதனையில் உள்ளனர். பனை மரங்களின் அவசியம் கருதி அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தார் ஆர்வமுடன் பனை விதைகளை நட்டு வருகின்றனர்.எனவே, அரசு எஞ்சியுள்ள பனை மரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement