LOGIN
dinamalar telegram
Advertisement

திறப்பு விழா காணாமல் சேதமான சமுதாயக்கூடம்

Share
கமுதி : கமுதி அருகே ஆனையூரில் 2016 ல் ராமநாதபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அங்காள பரமேஸ்வரி கோயில் அருகே சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.

தரமின்றியும், மின்சாதன பொருட்கள் அமைக்கப்படாமல் கட்டப்பட்ட சமுதாய கூடம் திறக்கப்படாமலே, படிக்கட்டுகள், சுவர்கள், தளங்கள், மேற்கூரை கான்கிரீட் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.பொதுமக்கள் பயன்படுத்த அச்சப்பட்டதால் பூட்டியே கிடக்கிறது. சமுதாய கூடத்தை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் அரசு நிதி 20 லட்சம் ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆனையூர் கிராம மக்கள் தங்களது வீட்டு விசேஷங்களை, போக்குவரத்து வசதியில்லாத நிலையில் 12 கி.மீ.,ல் உள்ள அபிராமத்திற்கு வாடகை வாகனங்களில் பயணித்து, நிகழ்ச்சிகளை நடத்தும் அவல நிலை உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement