Advertisement

சாயல்குடியில் உலா வரும் மாடுகளால் தொல்லை

Share
சாயல்குடி : சாயல்குடி நகர் பகுதிகள், பஸ் ஸ்டாண்ட், ஆரம்ப சுகாதார நிலையம், காய்கறி மார்க்கெட், இ.சி.ஆர்., ரோடு, அருப்புக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை மாடுகள் உலா வருவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.


சாலையோரங்களில் கூட்டமாக படுத்துள்ள மாடுகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. அதிகாலை, மாலை நேரங்களில்பசுமாட்டில் இருந்து பாலை கறந்துவிட்டு இரை தேடுவதற்காக மாடுகளை அவிழ்த்துவிடுகின்றனர்.இவை திடீரெனரோட்டின் குறுக்கே செல்வதால்பள்ளி மாணவர்கள், சைக்கிளில் செல்லும் போது அச்சத்துடன் செல்கின்றனர். ரோட்டில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை தேடிச்செல்லும் கால் நடைகளால் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுகிறது.

எனவே கால்நடை வளர்ப்போர் சாலைகளில் அவிழ்த்து விடாமல் வீடுகளில் கட்டி வளர்ப்பதற்கு சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement