Advertisement

இலவச மருத்துவ முகாம்

Share
கடலாடி : கடலாடியில் பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாளை முன்னிட்டுபா.ஜ., சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

பா.ஜ., மாநில துணைத்தலைவர் குப்புராமு தலைமை வகித்தார். முதுகுளத்துார் செல்வி கிளினிக் டாக்டர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் பொன். ஆறுமுகம், பாராளுமன்ற பூத் பொறுப்பாளர் ரமேஷ் பாபு, மாவட்ட செயலாளர் ராமசாமி, மணிமேகலை, கடலாடி ஒன்றியத் தலைவர் கோபாலகிருஷ்ணன், சாயல்குடி நகர் தலைவர் சத்தியமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., பொதுமருத்துவம் ஆகியவற்றில் 200 நோயாளிகள் பரிசோதனை செய்தனர். கடலாடி நகர் தலைவர் மும்மூர்த்தி நன்றி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement