Advertisement

அரசு கல்லுாரி சுற்றுச்சுவர் கட்டும் பணி

முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.

முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 2014ல் துவக்கப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தில்செயல்பட்டது. 2017 முதல் முதுகுளத்துார் -தேரிருவேலி சாலையில் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. கல்லுாரியில் முதுகுளத்துார், காக்கூர், குமாரக்குறிச்சி, சாலை, வெண்ணீர் வாய்க்கால், கருமல் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.கல்லுாரியின்பின்புறம் சுற்றுச்சுவர் அறை குறையாக இருப்பதால் இரவுநேரத்தில் மர்மநபர்கள்புகும் நிலை இருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கல்லுாரி முழுவதும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு 74 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கல்லுாரியில் பின்புறம் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.வளாகத்திற்குள் உள்ள சீமைகருவேல் மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement