Advertisement

மரக்கன்று நடும் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் அமிர்தாஸ் பள்ளி தேசிய பசுமைப்படை மாணவர்கள் மற்றும் தீபம் இந்தியா அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது. உப்பூர் சாலை, கோவில் ஊரணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகளை மாணவர்கள் நடவு செய்து வேலி அமைத்தனர். விழாவில் தீபம் இந்தியா அறக்கட்டளை தலைவர் மதிவாணன், பொருளாளர் ஜோசப் ஆல்பர்ட் உட்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement