Advertisement

பெண் சிசு மரணத்தில் மர்மம் என புகார்

மூணாறு : கேரளா, மூணாறு அருகே பெண் சிசு மரணத்தில் மர்மம் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டதால், புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

மூணாறு அருகே வட்டவடை ஊராட்சியில் கோவிலுார் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி- விஷ்வலட்சுமி தம்பதியினருக்கு 27 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அக்.,16 ல் உடல் நிலை பாதிக்கப்பட்டதாகஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.அதன்படி திருமூர்த்தி வீட்டிற்குச் சென்ற டாக்டர், நர்ஸ் குழந்தையை பரிசோதித்துவிட்டு, இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்தகவல்போலீசாருக்கு தெரிவிக்கவில்லை. உறவினர்கள் குழந்தையின் உடலை புதைத்தனர்.

புகார்: அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குழந்தையின் சாவில் மர்மம் உள்ளதாக நேற்று முன்தினம் தேவிகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்துவதற்கு, இடுக்கி மாவட்ட கலெக்டர் சதீசனிடம் அனுமதிகோரினர்.இன்று (அக்.19) பிரேத பரிசோதனை நடத்த வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement