Advertisement

இடுக்கியில் அக்.28 ல் பந்த் காங்., கூட்டணி அறிவிப்பு

மூணாறு : எட்டு கிராம நிர்வாகங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலம் தொடர்பான உத்தரவை அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, இடுக்கி மாவட்டத்தில் காங்., கூட்டணி சார்பில் அக்., 28 ல் 'பந்த்' நடக்கிறது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில்1964ம் ஆண்டு நிலச்சட்டப்படி வீடு மற்றும் விவசாயத்திற்கு வழங்கிய பட்டா நிலங்களில், 1500 சதுர அடிக்கு மேல் உள்ள வர்த்தக ரீதியான கட்டடங்கள் மீது நடவடிக்கைக்கு எடுப்பதற்கு கடந்த ஆகஸ்ட்டில் அரசு உத்தரவிட்டது.அதற்கு மாவட்டத்தில் எதிர்ப்பு வலுத்ததால், அந்த உத்தரவு கே.டி.எச்., சின்னக்கானல், சாந்தாம்பாறை, வெள்ளத்துாவல், பள்ளிவாசல், ஆனவிரட்டி,பைசன்வாலி, ஆனவிலாசம் ஆகிய கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் அமல்படுத்தி உத்தரவிட்டது.பாதிப்பு ஏற்படுத்தும் அந்த உத்தரவை அரசு வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி, இடுக்கி மாவட்டத்தில் அக்., 28 ல்காங்., கூட்டணி 'பந்த்' நடத்துகிறது. இத்தகவலை மாவட்ட காங்., தலைவர் இப்ராஹிம்குட்டிகல்லார் தெரிவித்தார்.ஏற்கனவே அக்., 26 ல் 'பந்த்' நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு, அக்., 27 ல் தீபாவளி என்பதால், கைவிடப்பட்ட நிலையில்,தீபாவளிக்கு மறு நாள் 'பந்த்' நடத்தப்படுகிறது. இதனால் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement